Get unlimited streaming on App

4.5(100M+ Downloads)

Wynk Music
வேலவா வடிவேலவா

வேலவா வடிவேலவா

வேலவா வடிவேலவா
05:33SHANKAR BILLA

Lyrics of வேலவா வடிவேலவா

வேல்சொலிக்க வேல்சொலிக்க வாரும் வேலவா வேண்டும்வரம் தான்கொடுக்க வாரும் வேலவா வேலெடுத்து நிற்பதனால் வேடனென்பதா கோல்பிடித்து நடந்ததனால் கிழவனென்பதா சேல்விழியர் மனம்பிடித்த செல்வனென்பதா மால்மருகன் தமிழருந்தும் மழலையென்பதா ஆதிசிவன் பார்வையிலே அவதரித்தவா சோதிவடி வாகஎம்மைச் சூழ்ந்திருக்கவா பாதிஉமைத் தாய்வயிற்றுப் பாலவேலவா மாதமெல்லாம் மாரியாகி மகிழ்வளிக்கவா சம்பங்கி மாலையிலே சாய்ந்துஆடிவா செம்பட்டு அங்கியிலே சிரித்துஓடிவா கும்பிட்டு நடந்தவரின் குறைதீர்க்கவா நம்பியவர் கைப்பிடித்து நலமளிக்கவா பாட்டிக்குச் சுட்டப்பழம் பாடமாக்கினாய் போட்டியிட்டுச் சூரனுக்கோ புத்திநல்கினாய் கூட்டிவந்து நான்முகற்கு குருவுமாகினாய் நாட்டுமக்கள் எமக்குமெப்போ நீதிசொல்லுவாய் கைப்பிடித்த தெய்வானைக் கண்ணசைப்பதோ பூப்பிடித்து அவள்பின்னே பாய்ந்துசெல்வதோ எப்பொழுது நீயருள்வாய் என்றிருப்பதோ இப்படியோர் காத்திருப்பும் எமக்களிப்பதோ தேவர்துயர் தீர்த்தபின்னும் தாமதமேனோ தேவியுமைப் பரிந்துரைத்துச் சொல்லவேணுமோ பூவமரும் கோதையரின் பிடியிருக்கமோ சேவலோடு மயிலிருக்க சுணங்கவேணுமோ கூறிவிட்டோம் யாமறிந்த குழந்தைமொழியிலே மாறவில்லை பக்தியுமே மாற்றுவழியிலே ஏறிவிட்டாய் எங்களுக்காய் அகவுமயிலிலே ஆறிவிடும் இனித்துயரும் அரைநொடியிலே வந்துவிட்டாய் வேல்முருகா வரமளிக்கவே சொந்தமென்று கரம்பிடித்து சுகமளிக்கவே தந்துவிட்டாய் கோடிநலம் தந்தையாகியே இந்தமானு டப்பிறவி இனிதுஉய்யவே அழகின் வடிவம் கண்டு அளவில்லா ஆனந்தத்தில் அடியேனின் எழுதுகோலும் ஆர்ப்பரித்துக்கொண்டது அருள்வேலனை அலங்கரிக்க எனைக்காத்து எந்தன் சிந்தையில் எப்பொழுதும் வீற்றிருக்கும் எம்பரம்பொருளே என் முருகனே மூத்தவனே முதல் குடியோனே தமிழ் கடவுளின் ஆதவனே தாமரையில் தவழும் ஆறுமுகனே

About Lyrics

Lyrics of a song are known to amplify emotions, and sometimes even create a memory. With Wynk, you can now read song lyrics in Hindi and English while listening to songs, throughout genres. Enjoy the true meaning of a song with வேலவா வடிவேலவா lyrics online on Wynk, while listening to வேலவா வடிவேலவா song online here. There are also options to choose your favorite artist SHANKAR BILLA songs on Wynk.

Browse songs from various genres including all of the English Songs and Hindi Songs. Wynk also makes it easy to create your own playlists that you can listen to anytime on Wynk Music. Keep Wynking!

Best way to Listen to Music!

Don’t forget to install Wynk Music on your mobile phones

Wynk Music is the one-stop music app for the latest to the greatest songs that you love. Play your favourite music online for free or download mp3. Enjoy from over 22 Million Hindi, English, Bollywood, Regional, Latest, Old songs and more.

2024 © All rights reserved | Airtel Digital Limited